வெள்ளி, 18 ஜூலை, 2008

தமிழ் டாக்கர்....

அன்பிற்கினிய தமிழ் உறவுகளே.........
இதோ எம் தமிழ் மண்ணில் நிகழும் வேதனைகள்
நாம் நம் பிள்ளைகளை ஆங்கிலம் பேசினால் சிறப்பு என்று எண்ணுகிறோம். அதனால்தானோ என்னவோ அப்பிள்ளைகள் இந்த மாதிரியான தண்டனைகளை அனுபவிக்கின்றன. இது கண்டிப்பாக ஆசிரியர்கள் குற்றம் இல்லை.(அடிப்பது என்பது தவறு) முழுக்க முழுக்க பெற்றோர்களின் குற்றம். டை கட்டி சூ போட்டுட்டு மம்மி, டாடி என்று அழைப்பதைத் தான் நாம் விரும்புகின்றோம். சொல்லுங்கள் நம் பிள்ளைகளை தமிழ் வழிக்கல்விக் கூடங்களுக்கு அனுப்ப தயங்குகிறோம். எங்க அவர்களது எதிர்காலம் கேள்விக்குறி ஆகிவிடும் என்கிற பயம் நமக்கு. பிள்ளைகள் எதை விரும்புகிறது என்பதைக்கூட அறியாதவர்களாய் நாம் இருக்கிறோம். அவர்கள் விரும்புகிறார்களோ இல்லையோ நாம் அவர்கள் மீது பல சுமைகளைத் தினிக்கின்றோம். பிற மொழிகளைப் படி, பாட்டு வகுப்புக்கு போ, நடனப் பயிற்சிக்கு போ, தற்காப்புகலைகளை கற்றுக்கொள், கணினி வகுப்புக்கு போ... ஏன் இப்படி நமது எண்ணங்கள் . அதுக்கு என்ன விரும்பம் என்று நாம் பார்க்காம நம்ம விருப்பத்திற்கு நாம் செய்தால் பாவம் அந்த பிஞ்சு உள்ளங்கள்..... கும்பகோணம் தீ விபத்தைப் போல..... எத்தனை எத்தனை சோகங்கள்... இந்த தமிழ் மண்ணில்..

கேடுகெட்ட கேவலாமான அரசியல்வாதிகளும், சில அரசாங்க கல்வித்துறை ஊழியர்களும் தன் பிள்ளைகளை மட்டும் எந்த பள்ளிகளில் படிக்க வைக்கின்றார்கள்........ பாருங்கள்... சற்று சிந்க்க வேண்டும்.


அமீரகத்தில் ஒரு தமிழ் தொழிலதிபர்
தமிழ், தமிழுக்காக.................. ன்னு மேடையில் பேசுறார். அவரு வீட்டு குழுந்தைகளுக்கு தமிழ் தெரியாது. இன்னும்
அந்த பிள்ளைகள் படித்தது நம்ம சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில. அப்பா, அம்மா அப்படின்னா என்னனு தெரியாது. அந்த அளவிற்கு அந்த குழுந்தையை வளர்த்தது யார் ?
அந்த குழுந்தைகள்கிட்ட நம்மளும் ஆசையாக எதாவது தமிழில் பேசினோம் என்றால் அவங்க சொல்லுவாங்க அங்கிள் நீங்க கேட்டது ஒன்னும் புரியவில்லை.
இப்படிப்பட்ட தமிழர்களோடு தமிழ் மொழி காப்போம்னு கை கோர்த்து நாம் சென்றோம் என்றால் எம் தமிழ் இனம் விளங்குமா?வியாழன், 12 ஜூன், 2008

உங்களோடு நான்...........


தப்பளாம்புலியீரில் பிறந்து
திருவாரூரில் படித்து
சென்னையில் முதல் பணி தொடங்கி
அழைந்து திரிந்து அமீரகம் வந்து
கணினியின் பொறியாளனாக வலம் வந்து
கொண்டிருக்கும் இந்த தமிழன்

உலகம் முழுவதும்
இருக்கும் எம் இன
இதயங்களை
இணைக்கும்
பாலாமாய்
விளங்கும்
இணைய வழி
உறவுகளே
உங்களோடு
நான்!...........

உறவாட
வலைப் பூ
வழியாக
வலம்
வருகிறேன்.

பிழை இருப்பின் திருத்தி
நிறை இருப்பின் வாழ்த்தி
என் எழுத்துக்கு
உரமூட்ட உறவுகளை
தமிழ் தூவி
அழைக்கின்றேன்.......... என் இதயம் திறந்து..........உணர்ச்சியற்ற மனிதானாய் வாழ்வதை விட
உணர்வுள்ள தமிழனாய் வாழ்வது மேல்.


பாசமுடன்
பாரத்
அமீரகம்.